லோகநாதன்.சு
லோகநாதன். சு புனைப்பெயர்கள்: இளந்தமிழ்வேள், உலகநாதன். 1. வகை: உயர்திணை, அஃறிணைஉயிரி, நாற்திரம், தலைப்பு, கட்டுமானம் ஆகியவற்றில். உயர்திணை. 2. மொழி, இருப்பிடம்: தமிழ்மொழி. மேட்டூர்அணை, தமிழ்நாடு, நாவலந்தேயம். 3. பிறப்பு: 10,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு -5060. (25.11.1958) 4. வினைத்திட்பம்: அ.எழுத்தாளர்: கட்டுரை, யாப்பு, கதை ஆ.நூல்ஆசிரியர்: தமிழும் தமிழ்அறிஞர்களும் இ, வலையொளியாளர்: கொண்டாட்டம் வலைக்காட்சி. உ. சமுகவலைதள இடுகையாளர்: முகநூல். 5. ஈடுபாடு: கணியம், மந்திரம், வகைப்பாட்டியல் என்கிற தமிழர் அடிப்படையும், பாகுபாட்டியல், முரண்பாட்டியல் என்கிற உலகினர் அடிப்படையுமான ஐந்தியல் ஆய்வறிஞர் 6. வணிகம் நாவலந்தேய வருமானத்திற்கான வணிகம். மனை வணிகம், இயற்கை வேளாண் பொருட்கள் வணிகம் 7. வரலாறு: நான் பிறந்த ஊர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மேச்சேரி என்னும் கிராமம். என் அகவை ஐந்தில், தாரமங்கலத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே, தமிழில் நன்றாகப் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டேன். என் தொடக்கப்பள்ளி ஆசிரியர் தமிழ்த்திரு செயராமன் அவர்கள்.