உங்கள் ஆண் குழந்தைகளுக்குச் சூட்ட அழகான பெயர்கள் கணியக்கலை இயல்புகளுடன்



1. வகை: 
உயர்திணை, அஃறிணைஉயிரி, நாற்திரம், தலைப்பு, கட்டுமானம் ஆகியவற்றில். மின்நூல் (கட்டுமானம்)

2. நூல் தகவல்:
உங்கள் ஆண் குழந்தைகளுக்குச் சூட்ட அழகான பெயர்களைக் கொண்டுள்ள இந்நூல், ஒவ்வொரு பெயருக்குமான கணியக்கலை இயல்பையும் விளக்குகிறது.

சோதிடம் சாதகம் என்கிற நிமித்தகத்திற்கு அடுத்து, நிமித்தகத்தின் மேம்பட்ட முன்னேற்றக்கலையாக, தமிழ்முன்னோர் முன்னெடுத்த இரண்டாவது முன்னேற்றக்கலை கணியம் குறித்து:

உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சூட்டும் பெயரால் ஒவ்வொரு முறையும் அவர் அழைக்கப்படும் போதும் அவர் அந்த பெயருக்குரிய ஒலியனின் எண்ணிக்கை அடிப்படையில் குறிப்பிட்ட இயல்புக்கு உரியவர் என்று விசும்பில் பதிவு செய்யப்படுகிறார். அவர் அவ்வாறே அவருக்கான இயல்பில் வலுப்பெற்று அந்த இயல்புக்கான துறையில் ஈடுபடும் போது சிறப்பான வெற்றியை ஈட்டுகிறார். இனி இயல்புகள் எவையெவை என்னும் தலைப்பிற்கு வருவோம்:-
ஒலியன் 1க்கு இயல்பு உழைப்பு மற்றும் தாய்ப் பண்பு
ஒலியன் 2க்கு இயல்பு நிருவாகம் மற்றும் தந்தைப் பண்பு
ஒலியன் 3க்கு இயல்பு முனைப்பு மற்றும் குழந்தைப் பண்பு
ஒலியன் 4க்கு இயல்பு பயணம் மற்றும் இனப்பற்று
ஒலியன் 5க்கு இயல்பு கலை மற்றும் கொண்டாட்டம்
ஒலியன் 6க்கு இயல்பு தொழில்நுட்பம் மற்றும் பேரறிவு
ஒலியன் 7க்கு இயல்பு கமுக்கம் மற்றும் செல்வம்
ஒலியன் 8க்கு இயல்பு புகழ் மற்றும் பேரளவு
ஒலியன் 9க்கு இயல்பு போரியல் மற்றும் தனிமுடிவு

இயல்பை இரட்டைத் தலைப்பில் நாம் தெரிவித்திருக்கிறோம். அந்த இரட்டைத் தலைப்புகளின் விரிவாக உங்கள் பிள்ளைகள் இயங்கும் என்பதாக தமிழ்முன்னோரால் முன்னெடுக்கப்பட்ட இரண்டாவது முன்னேற்றக் கலையே கணியக்கலை ஆகும்.

இந்த நூலை படிக்கவோ, விலைக்கு வாங்கி உங்கள் மின்னூலகத்தில் வைத்துக் கொள்ளவோ, இணைப்பைத் தொட்டு அமேசான் கிண்டில் பதிப்பகத்திற்குச் சென்று நூலை வாங்க முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடவுள்

குமரி நாடன்

அந்த அதிகாரத்திற்கானது மந்திரம்