இரண்டாவதுதொகுப்பு குமரிநாடன்கட்டுரைகள்




1. வகை: 
உயர்திணை, அஃறிணைஉயிரி, நாற்திரம், தலைப்பு, கட்டுமானம் ஆகியவற்றில். மின்நூல் (கட்டுமானம்)

2. நூல் தகவல்:
5125 ஆண்டுகளுக்கு முன்பு- எந்த அயல் இயல்களும் இந்தியாவில் நுழைவதற்கு முன்னம், தமிழர்களே இந்தியாவின் ஒட்டுமொத்த நாகரிக மாந்தராக விளங்கி வந்தனர்.

இந்தியா என்பது பாரதம் என்ற பெயரிலோ இந்தியா என்ற பெயரிலோ அதுவரை யாராலும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. குமரிக் கண்டம் முதல் இமயம் வரை தமிழர் தாராளமாக தாம் புழங்கி வந்த பகுதியை நாவலந்தேயம் என்று அழைத்தனர்.

5125 ஆண்டுகளுக்கு முந்தைய காலம். உலகம் முழுவதும் தமிழருக்கு வணிகத் தொடர்பு இருந்த காலம் ஆகும்.

தமிழர் கடலோடும்திரம் வியந்து, தமிழர் பொருள் பொதித்த சொற்களைக் கொண்ட தமிழ்திரம் வியந்து, தமிழரின் அறிவார்ந்த வானியல்திரம் வியந்து, தமிழரின் மெல்லிய நூலடையை வாங்கி தமிழரின் துகிலியல்திரம் வியந்து, கடலில் விளைந்த முத்தை குளித்து வணிகமாற்றுகிற தமிழனின் கடல்திரம் வியந்து, தமிழனின் கப்பல் கட்டும் திரம் வியந்து, ஆமைகளை கொண்டு கடலோடிய தமிழனின் திசையியல் நுட்பத்திரம் வியந்து உலகம்- தமிழர் இருப்பிடத்தை அறிய ஆர்வம் கொண்டிருந்த காலம். உலகினர் தமிழர் நாகரிகக் கூறுகளில் மலைத்திருந்த காலம். இந்தியா குறித்து 'நாவலந்தேயம்' என்ற அறிமுகம் மட்டுமே உலகினருக்கு இருந்தது.

அதைத்தான் உலகினர், ந்தேயம் -ந்தேயா - INDIA என்று பதிவு செய்தனர். அமெரிக்காவில் ஐரோப்பியர் இந்தியாவைத் தேடியதும் அதன் பொருட்டே.

அப்படி இப்படி என்று நீண்ட காலத்திற்குப் பிறகு வாசுகோடகாமா இந்தியாவைத் தேடி வந்தடையும் போது- ஆரியர் அராபியர் மகமதியர் எல்லாம் நுழைந்து கலந்து விட்டதால், அவர்கள் வணிகத் தொடர்புக்காகத் தேடிவந்த நாவலINDIAம் இல்லை. நாகரிகத் தமிழர் இல்லை.

இப்படி உலகை வியக்க வைத்திருந்த தமிழினம்- இன்றைக்கு, ஆள்வதற்கு சொந்தமாக நிலமும் அதிகாரமும் இல்லாமல், ஒட்டுமொத்த நாவலந்தேயத்தையும் அயலவர்களுக்கு விட்டுக்கெடுத்துவிட்டு- பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், மார்க்சியம் ஆகிய அயல்களில் ஒவ்வொன்றிலும் தனித்தனியாகவும், ஒன்றுக்கு மேற்பட்டவைகளில் கலவையாகும், பயணித்து வருகிறது.

பேரறிமுகமான கலைஞர்கள் வேண்டாம். பேரறிமுகமான அரசியல் தலைவர்கள் வேண்டாம். பேரறிமுகமான விளையாட்டு வீரர்கள் வேண்டாம். பெரும் பணக்காரர்கள் வேண்டாம். பேரளவாகப் பட்டம் பெற்றவர்கள் வேண்டாம். தமிழ்வழிக் கல்வியில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கிய ஓர் ஆயிரம் பேர்கள் போதும்.

பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், மார்க்சியம் ஆகிய அயல்களில் ஒவ்வொன்றிலும் தனித்தனியாகவும், ஒன்றுக்கு மேற்பட்டவைகளில் கலவையாகவும் இருந்து வரும் அவர்கள் அவைகளில் இருந்து முற்றாக விலகினால் அவர்களுக்குள் முந்தை தமிழரின் தமிழியல் இயல்பூக்கமாக நிரம்பும் என்று பேசும் வகைக்கானவைகளே என் அனைத்துக் கட்டுரைகளும்.

இந்த நூலை படிக்கவோ, விலைக்கு வாங்கி உங்கள் மின்னூலகத்தில் வைத்துக் கொள்ளவோ, இணைப்பைத் தொட்டு அமேசான் கிண்டில் பதிப்பகத்திற்குச் சென்று நூலை வாங்க முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடவுள்

உங்கள் ஆண் குழந்தைகளுக்குச் சூட்ட அழகான பெயர்கள் கணியக்கலை இயல்புகளுடன்

அந்த அதிகாரத்திற்கானது மந்திரம்