கடவுள்

1. வகை: உயர்திணை, அஃறிணைஉயிரி, நாற்திரம், தலைப்பு, கட்டுமானம் ஆகியவற்றில்.
தலைப்பு.

2. விளக்கம்:.

இயற்கையில், முதலாவதானது தனிஒன்றுகள் என்கிற காலமும் வெளி என்கிற இடமும் என்று நிறுவியுள்ளனர் தமிழ் முன்னோர். அதைத்தான் தொல்காப்பியம்,
'முதலெனப்படுவது இடமும் பொழுதும்' என்று பேசும்.
தனி ஒன்றுகள் காலம் எனப்படுவது, அதற்கு இயக்கம் இருக்கிற காரணம் பற்றியதாகும்.

வெளி என்கிற இடம் எல்லை அற்றது.
வெளி என்கிற இடம் சொந்த இயக்கம் அற்றது.
வெளி இயக்கம் அற்றது என்கிற நிலையிலேயே அதில் காலம் என்கிற தனி ஒன்றுகள் தொடர்ந்து இயங்க முடிகிறது.


தொடர்ந்து இயங்கிய தனிஒன்றுகள் பல வேறு கூட்டியக்கங்களாக மாறின. இரண்டு தனி ஒன்றுகளின் பொருந்து முகத்தில் எதிர் இயக்கம் அமையும் என்கிற காரணம் பற்றி, தனிஒன்றுகள் தனிஒன்றுகளாகவே இயங்க முடியாமல் 4,8,16 என்பதான பலவேறு  கூட்டியக்கங்கள் உருவாகின்றன. கயிறு திரிக்கும் தொழிலில் இரண்டு மெல்லிய கயிறுகள் ஒற்றையாக முறுக்கப்படுவது இந்த அடிப்படையில்தான்.


தொடர்இயக்கம் காரணமாக, காலத்தின் (தனிஒன்றுகளின்) நோக்கம் வளர்ச்சி வளர்ச்சி என்றாகிறது பெருவெடி வரை. பெருவெடி- காலத்தின் (தனிஒன்றுகளின்) இறுதி நிலையாகும். பெருவெடிக்கு முந்தைய நிலையில், அனைத்து தனிஒன்றுகளும் ஒற்றைக் கோளமாக மாறி இயங்குகிறது. 

ஒரு நிலையில் அந்த ஒற்றைக் கோளம் வெடித்து, அந்த ஒற்றைக்கோளம் தனி ஒன்றுகளாக முதலெனப்படுவதில் ஒன்றான இடத்தில் சிதறி, மீண்டும் முதலெனப்படுவது இடமும் காலமும் என்கிற இயற்கையின் அடுத்த பிறப்பு தொடங்க. இயக்கமும் எல்லையும் அற்ற வெளி காரணம் ஆகிறது. 

நான் ஒரு கூட்டியக்கம் என்கிற நிலையில், வெளி- எனக்கு வெளியிலும் அதாவது கடந்தும், எனக்கு உள்ளமைந்தவைகளுக்கும் வெளி அமையும் காரணம் பற்றி எனக்கு உள்ளும், 'வெளி' அமைகிற காரணம் பற்றியும், இயக்கமும் எல்லையும் அற்ற 'வெளி' எனது இயக்கத்தால், நம் எல்லோருடைய இயக்கத்தால், இயக்கம் பெற்று விண்வெளி ஆகிறது.

இயக்கம் பெற்ற 'வெளி'யான விண்வெளி தனது இயல்பான இயக்கமற்ற நிலையை எய்த, என்னிடம் இருந்து பெற்ற இயக்கத்தால், என்னையும், நம்மிடம் இருந்து பெற்ற இயக்கத்தால் நம்மையும் முயக்கிவிட்டு தன்கடமை முடிக்கிறது.

தனி ஒன்றுகளின் அடுத்த கூட்டியக்க நிலை நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரங்கள்.

இந்த நாற்திரங்களின் அடுத்த கூட்டியக்க நிலைதான் நானும், நாமும்.

உலகினர் அனைவருக்கும் வெளி அல்லது ஆகாயம் அல்லது ஸ்கை ஒரு ஆற்றல் மூலமா? என்கிற வினா இன்று வரை தொடர்ந்து இருக்கையில், 

நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்கு ஆற்றல் மூலங்களோடு, வெளி நம்மிடம் இருந்து இயக்கம் பெற்று நம்மை முயக்கவதால், இயக்கமும் எல்லையும் அற்ற வெளியையும் ஆற்றல் மூலம் என்று நிறுவி, ஆற்றல் மூலங்கள் மொத்தம் ஐந்து என, ஐந்திரம் என்று ஆற்றல் மூலங்களுக்குத் தலைப்பிடுகின்றனர் தமிழ்முன்னோர்.

வெளி-தான் என்னை முயக்குகிறது.
வெளி-தான் நம்மை முயக்குகிறது.

'வெளி'க்கு சொந்த இயக்கம் இல்லாத காரணம் பற்றி, அது என்னை முயக்குவது அது நம்மை முயக்குவது சொந்த இயக்கத்தால் அல்ல. 

வெளி- என் இயக்கத்தால், வெளி- நம் இயக்கத்தால் விண்வெளியாகி என்னை முயக்கும், நம்மை முயக்கும் விசும்பு என்கிற மூன்றாவது நிலை எய்துகிறது.

விசும்பு இயற்கையின் அனைத்திலும் கடந்தும் உள்ளும் இருக்கிற காரணம் பற்றியும், அனைத்தையும் முயக்கும் தற்காலிக சிறப்பு ஆற்றல் பெற்ற காரணம் பற்றியும் அதை கடவுள் என்கிற ஆற்றல் மூலமாக நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர்.

கடவுள் என்பது தமிழ்ச்சொல் மட்டுமே.

கடவுள் என்கிற சொல்லில் பொதிக்கப்பட்ட பொருளில் உலகில் எந்த மொழியும் எந்தச் சொல்லையும் இன்றுவரை, கொண்டிருக்க வில்லை. 

காலமாகிய நாமும், இடம் ஆகிய கடவுளும் வேறு வேறு ஆவோம்.

கடவுள் நம்மிடம் இருந்து பெற்ற இயக்கத்திற்கு மட்டுமே, நமக்கு முயக்கம் என்கிற எதிரியக்கம் தருவது ஆகும்.

கடவுள் நம்மை படைத்தது அல்ல.

கடவுளும், நம்முதன்மையான தனிஒன்றுகளும் இணையான பெருமைக்கு உரியவையே.

நான்- என் செயலாலும், என் எண்ணத்தாலும், என் தமிழாலும் ஒவ்வொரு தற்பரை நேரமும் கடவுளை (வெளியை) இயக்கி, நான் கடவுளை இயக்கிய வகைக்கு, கடவுளிடம் இருந்து முயக்கம் பெற்று வளர்கிறேன்.

நான் எப்படி வளரவேண்டும் என்பதை கடவுளோ, நீங்களோ, வேறு யாரோ ஒருபோதும் தீர்மானிக்க, முடியவே முடியாது.

கடவுள் நான் உருவாக்கிய என் பிள்ளை. கடவுளிடம் நான் எது கேட்டாலும் கிடைக்கும். 

என்னால் உருவாக்கப்பட்டது அனைத்தும் கடவுள் கூறு தெய்வங்கள். தெய்வங்கள் கொண்டாட்ட நோக்கம் பற்றியவை. 

ஆற்றல் போற்றும் நோக்கமும், கொண்டாட்டம் போற்றும் நோக்கமும் ஒருசேரக் கொண்டவை உலகில் தமிழினம் மட்டுமே.

தெய்வங்கள் எதுவும் கடவுள் ஆக மாட்டா.
தெய்வம் ஆற்றல்மூலம் அல்ல.
தெய்வங்கள் கொண்டாட்டங்களுக்கான உருவாக்கங்களே.

என்னின் முந்தை வடிவங்கள் ஆன நிலம் நீர் தீ காற்று ஆகிய நான்கு திரங்கள் கடவுளில் இறைந்து கிடப்பதால் அவற்றை இறை என்று நிறுவினர் தமிழ்முன்னோர்.

நம் உருவாக்கத்தில் பங்கு வகிக்கும் அனைத்தையும் இறைக்கூறு தெய்வங்கள் என்று தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர். இறைக்கூறு தெய்வங்கள் நன்றி பாராட்டுதல் என்கிற கொண்டாட்டத்திற்கு உரியவை. 

இறைக்கூறு தெய்வங்கள் உயிருள்ளவையோ, வாழ்கிறவையோ அல்ல. இறைக்கூறு தெய்வங்களின் உயிர் காலமாதலில், கூட்டியக்கச் சுழியங்களாக, தரவுகளாக கடவுளில் பதிவாகி இருக்கின்றன. 

நிலம், நீர், தீ, காற்று ஆகிய இறை நமக்கு அப்பாற் பட்ட ஆற்றல் அல்ல. இறையில் நிலம், நீர். தீ, காற்று என்கிற எதையும் நாம் நேரடியாக எடுத்துக் கொள்ளலாம்.

இறைக்கூறு தெய்வங்களையும் இறையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.

மதங்களை உருவாக்கிய தனிமனிதச் சான்றோர்கள் தங்களால் மட்டுமே கடவுளிடம் இருந்து உங்களுக்கு எதையும் பெற்றுத்தர முடியும் என்று பொய்நிறுவி வருகின்றனர்.

நீங்கள் ஒப்புக்கொடுத்தால் மட்டுமே அவர்களால் உங்களுக்குக் கடவுளிடமிருந்து எதையும் பெற்றுத்தர முடியும். 

நீங்கள் அவர்களுக்கு ஒப்புக்கொடுத்து கடவுளிடம் இருந்து எதைப் பெறுவதற்கும் நீங்கள் அவர்களின் கடவுள் இடத்திற்கு ஒரு வாடகை தருகின்றீர்கள். அவர்கள் மூலமாக நீங்கள் பெறுவது எதுவும், உங்கள் வாழுங்காலத்திற்கு மட்டும் உங்களுக்கு மட்டும், பயனளிப்பதும் உங்கள் வழிகாட்டிகளின் பிந்தை ஏழு தலைமுறைக்கும் பயன் அளிப்பதும் ஆகும்.

நீங்களே கடவுளிடம் இருந்து எதையும் கேட்டுப்பெறுவதை உறுதியாக்கும் போது, கடவுளிடம் உங்களுக்குச் சொந்த இடம் அமைந்து அது உங்கள் பிந்தை ஏழு தலைமுறைக்கும் பயன்அளிக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குமரி நாடன்

அந்த அதிகாரத்திற்கானது மந்திரம்