அறிவோம் கணியக்கலை
1. வகை:
உயர்திணை, அஃறிணைஉயிரி, நாற்திரம், தலைப்பு, கட்டுமானம் ஆகியவற்றில். மின்நூல் (கட்டுமானம்)
2. நூல் தகவல்:
அன்பின் இனிய தமிழ் உறவுகளே! யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடிய கணியன் பூங்குன்றனார் அவர்களை அனைவரும் அறிவோம். பக்குடுக்கை நன்கணியன் என்றும் இன்னொருவர் இருந்திருக்கிறார். அவரை தமிழ் இலக்கியப் பட்டப்படிப்பு படித்தவர்கள் அறிவார்கள்.
பூங்குன்றனாருக்குக் கணியம் என்ற அடைமொழி கொடுக்கப்பட்டிருக்கிறதே? கணியம் என்றால் என்ன? அது ஒரு துறைபடிப்பு அல்லது கலை என்றால் அது நம்முடன் தொடர்ந்து எடுத்து வரப்பட்டிருக்கிறதா என்ற கேள்விகள் எழும்.
திருக்குறள் நமக்குக் கிடைப்பதைப் போல கணியம் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் மீட்பதற்கு தமிழ் மொழியில் வேறுவேறு வடிவங்களில் தகவல்கள் கிடைக்கின்றன. கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகால முயற்சியில், கணியத்தை கொஞ்சம் மாறுபட்ட வடிவத்தில் அடிப்படைக்கு பொருந்தும் வகையாக மீட்டெடுத்திருக்கிறேன்.
இந்த நூலை படிக்கவோ, விலைக்கு வாங்கி உங்கள் மின்னூலகத்தில் வைத்துக் கொள்ளவோ, இணைப்பைத் தொட்டு அமேசான் கிண்டில் பதிப்பகத்திற்குச் சென்று நூலை வாங்க முடியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக